பைக், ஸ்கூட்டி மோதி 3 பேர் உயிரிழப்பு

by Staff / 19-07-2024 04:41:42pm
பைக், ஸ்கூட்டி மோதி 3 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கீழக்குறிச்சியில் பைக்கும், ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதியதில் மோனிஷ் (9), ராதிகா (30), விக்னேஷ் (18) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராதிகா தனது மகன் மோனிஷை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருக்க, எதிரே விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்களை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories