திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

by Staff / 24-08-2025 03:59:46pm
திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் மண்டபத்தில் தக்கார் ரா. அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் சு. ஞானசேகரன் முன்னிலையில் நடந்தது. 

சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினர், கோவில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ. 4 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 233, ஒரு கிலோ 5 கிராம் தங்கம், 18.16 கிலோ வெள்ளி, 17.5 கிலோ பித்தனை, 3.07 கிலோ செம்பு, 7.5 கிலோ தகரம், வெளிநாட்டு பணத்தாள்கள் 1,218 ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இந்து சமய அறநிலையத் துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் தங்கம், நாகவேல், அலுவலகக் கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் முத்துமாரியம்மாள், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Tags : திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

Share via

More stories