சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி - அசோக்குமார் இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமின்

by Admin / 09-07-2026 12:09:04am
சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி - அசோக்குமார் இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமின்

தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தால் 35 கோடி தருவதாக பேசியதாக கூறப்படும் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது.. இருவரும் தினமும் காலையிலும் மாலையிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை நிபந்தனை தொடரும் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவிவிக்கப்பட்டுள்ளது..

ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ இளையராஜா பேரவை தலைவருக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக செயல்பட்டால் 35 கோடியை தரப் பேரம் பேசப்பட்டதாகவும் மிரட்டல் எடுக்கப்பட்டதாகவும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இப் புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு, நரேஷ் உட்பட ஒன்பது பேரை கைது செய்திருந்தனர். இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையின் படி, செந்தில் பாலாஜியின் பெயர் நேரடியாக இல்லை என்றும் வரவிருக்கும் இடைத்தேர்தலை மனசில் வைத்து அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கறிஞர் வைத்த வாதத்தை ஏற்று அவருக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளது ,சென்னை உயர் நீதிமன்றம்..

 

Tags :

Share via

More stories

Logo