திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த 440.42 போடி நிதியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
முன்னாள் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சியான அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த 440.42 போடி நிதியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
கட்சி நிதியிலிருந்து 2023 ஏப்ரல் முதல் 2026 ஜூன் வரையில் தேர்வில் ஏவிஎஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சுமார் 160 கோடி மாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த தொகையிலிருந்து சுமார் 112 கோடியை பயன்படுத்தி ஒரு எம்பிரேயர் 600 சொகுசு விமானம் மற்றும் அகஸ்டா 109 எஸ்பி ஹெலிகாப்டர் ஆகியவை வாங்கப்பட்டு கட்சிக்கு வாடாகைக்கு விடப்பட்டு அதிலிருந்து பெரும் தொகையை நிறுவனத்திற்கு திரும்ப அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமலாக்க துறையின் இத்தகைய நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் செயல் என்று திரிணாமுல்காங்கிரஸ் விமர்சித்துள்ளதுடன் தங்களது அனைத்து நிதி ஆதாரங்களும் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Tags :



















