ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ள தவெக தலைவர் விஜய்

by Editor / 09-05-2026 04:48:56pm
ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ள தவெக தலைவர் விஜய்

ஆளுநர் அர்லேக்கரை சந்திக்க தவெக தலைவர் விஜய் மாலை 5 மணிக்கு சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோருடன் நேரில் சென்று ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். விசிகவின் ஆதரவு கடிதம் விஜய்க்கு தற்போது கிடைத்துள்ள நிலையில், 118 MLAக்கள் ஆதரவுடன் விஜய் ஆளுநரை சந்திக்கிறார். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நாளை விஜய் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via
Logo