இரண்டு ஆணைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பும் அ.தி.மு.க ஏன் மெளனம்?

by Writer / 23-10-2022 10:17:03am
இரண்டு ஆணைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பும் அ.தி.மு.க ஏன் மெளனம்?


அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த பொழுது இரண்டுஆணையங்களை அமைத்தார்.1) ஜெ யலலிதா மரணம் குறித்த ஆறுமுகச்சாமி ஆணையம்2)தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்த அருணா ஜெ கதீசன் ஆணையம்.இந்த இரண்டு ஆணையங்களும் தம் அறிக்கைளை தாக்கல் செய்து பல மாதங்கள் ஆன பின்பு சட்டமன்றத்தில்இந்த ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதன் பிறகு ஆணையத்தின் கருத்துக்கள் பரிந்துரைகள்ஊடகங்களில் செய்திவடிவில் வெளியான பின்பு ஊடக விவாதங்களாக மாற்றப்பட்டது.பல கட்சியை சேர்ந்தவர்களின்கருத்துக்களுடன் பொது விவாதம் அரங்கேற்றப்பட்டது.அதில் ,பலரின் பார்வையில் பல்வேறு விதமான கருத்துக்கள்
முன் வைக்கப்பட்டு பொதுப்பார்வைக்கு அக்குவேறு ஆணிவேராக ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்கள்மீதான விவாதங்கள் நடந்தன.ஆனால்,ஆணைத்தை அமைத்த அப்போதய அ.தி.மு.க அரசு  ...ஆட்சியாளர்களிமிருந்துஎந்தக்கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை.வள்ளுவர் கோட்டத்தில்,சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்துணைத்தலைவர் இருக்கை வழங்குவதில் சபாநாயகர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகச்செயல்படுகிறார்
என்பதற்காக வள்ளுவர் கோட்டத்தில் போபாட்டம்-உண்ணாவிரதமிருந்து கைதாகி விடுதவை ஆயினர்.ஆனால்,தாம்அமைத்த ஆணையம் என்று சொல்லும் எதிர்க்கட்சித்தலைவர் எந்தக்கருத்தும் கூறாமல் மெளனம் காப்பது அரசியல்வட்டாரத்தில் பலகேள்விகளை எழுப்பும்நிலை உள்ளது.அருணாெஜகதீசன் ஆணையத்தின் பரிந்துரைபடி காவலதுறையில் நால்வரும்வருவாய்தறையிலிருந்து இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆறுமுகசாமிஆணையம் பரிந்துரைத்த விசயத்திற்கு சசிகலா,டி.டி.வி.தினகரன் மட்டுமே பதிலளித்துள்ளனர்.பா.ஜ.க.சார்பாக அதன்
தலைவர் அண்ணாமலை கருத்துச்சொல்லியுள்ளார்.ஆனால்,அ.தி.மு.கவிலிருந்து எந்த ஒர் அசைவுமில்லை.....

 

Tags :

Share via