ஜூலை 23-ம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல்

ஜூலை 23-ம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 3வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்துள்ள நிலையில், மீண்டும் நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :