புதிய கல்வி கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்

by Admin / 17-03-2022 12:16:52pm
 புதிய கல்வி கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்

தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆராய்ந்து அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த கம்பன் விழாவில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது, தமிழை கொண்டாடுபவர்கள், கம்பனையும் கொண்டாட வேண்டும், ஏனென்றால் வாழ்வியல், உழவியல் சொல்லி கொடுத்தவர் அவர் என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர், ராமனை தாமரை என்று சொல்வதால் தான் தனக்கு கம்பனை பிடிக்கும் எனவும், ராமனை கம்பர் ஓவியத் தாமரை என்று குறிப்பிட்டுள்ளதால், ஓவியத் தாமரை என்றும் வாடாது. அதேபோல் காவிய தாமரையும் வாடுவதற்கு வாய்ப்பில்லை என்றார். 

 

Tags :

Share via

More stories