பஞ்சாபில் சூடுபிடிக்கும் அரசியல் களம்...

by Admin / 19-12-2021 04:37:34pm
பஞ்சாபில் சூடுபிடிக்கும் அரசியல் களம்...

பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபில் கால்தடம் பதிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு அங்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இந்தநிலையில் பஞ்சாபில் பொதுநிகழ்ச்சி ஒன்றில் கெஜ்ரிவாலை தாக்கி பேசிய நவ்ஜோத் சித்து, அவர் ஒரு பொய்யர் என குறிப்பிட்டுள்ளார்.
 
தேர்தலை முன்னிட்டு போலி வாக்குறுதிகளை அளிப்பவர் என்றும், அவர் ஒரு அரசியல் சுற்றுலா பயணி எனவும் விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாது டெல்லியில் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, 440 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பினை கெஜ்ரிவால் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் பஞ்சாபில்  பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ள கெஜ்ரிவால், அதனை டெல்லியில் செயல்படுத்தாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories