தலையை கல்லால் சிதைத்து கொடூரக் கொலை

பெங்களூரு கேபி அக்ரஹாரா பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் ஒரு இளைஞரை கொடூரமாக கொன்றனர். அனைவரும் இணைந்து, கல்லை தலையில் தூக்கிப்போட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்ததாக தெரிகிறது. இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்தனர். இது பற்றி உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
படுகாயம் அடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்ற போதிலும், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாதாமி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :