சுவிட்சர்லாந்து பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம்
சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நபர் அதனை வெளிப்படையாக எதிர்த்தால் மட்டுமே அது குற்றமாக கருதப்படும் என்னும் சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டாலே குற்றம் என திருத்தி எழுதி, சட்டதிருத்தத்தை கொண்டு வர சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இருசபைகளின் ஒருமித்த முடிவுக்குபின் பொதுமக்களின் வாக்கெடுப்பிற்கு அனுப்பப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :