முதலமைச்சர் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குஇன்று பயணம் மேற்கொள்கிறார்.

by Admin / 23-05-2023 12:30:35am
 முதலமைச்சர்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குஇன்று பயணம் மேற்கொள்கிறார்.

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும்  முதலமைச்சர்

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குஇன்று பயணம் மேற்கொள்கிறார்.இது குறித்து அவா் வெளிட்டுள்ள அறிக்கை வருமாறு-இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிலும் விதமாக 301 நிதியாண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்பட செய்வதை ஒரு லட்சிய இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது இந்த இலக்கினை அடைந்திட ரூவாய் 23 லட்சம் கோடி அளவிற்கு  முதலீடுகளை ஈர்த்திடவும் 46 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் வேண்டும் இந்த நோக்கத்திற்காக தொழில் துறை பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம்  ஜூலை 2021 முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு  தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்தி 95 ஆயிரத்து 339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் மற்றும் 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.. அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன. தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021 தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021 தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டு கொள்கை 2022 தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022 தமிழ்நாடு காலணி மற்றும் தொல்பொருள் கொள்கை 2022 தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2022 தமிழ்நாடு எத்தன நாள் கலவை கொள்கை 2021 மற்றும்  தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த  கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும்  வரும் ஜனவரி  2024 இல் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்.

 

Tags :

Share via