குடியரசு தின விழாவையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு

by Editor / 24-01-2022 08:51:32pm
குடியரசு தின விழாவையொட்டி மாநிலம் முழுவதும்  போலீசார் தீவிர பாதுகாப்பு

குடியரசுதினவிழா நாளை மறுநாள் கோலாகலமாக கொரோனா விதிமுறைகளுக்குட்ப்பட்டு கொண்டாடப்பட உள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
பஸ்நிலையங்களிலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வழிபாட்டு தலங்கள், கடற்கரை, திரையரங்குகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.சென்னை நகரில் போலீசார் இரவு ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்தாலும் இரவு ரோந்து மற்றும் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் நடப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பாதுகாப்பு கருதி விமான நிலையம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
விமான நிலையம் வரும் வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். விமான நிலையத்தில் சோதனை பலப்படுத்தப்பட்டு இருப்பதால் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வந்து சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.மேலும் ரயில் நிலையங்கள்,கடற்கரை பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் திவீரமான சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

Tags : Police intensify security across the state ahead of Republic Day celebrations

Share via