என்ன ஆனாலும் பரவாயில்ல… நாங்க இதை செய்யாம விடமாட்டோம்… கூட்டமாக திரண்ட பொதுமக்கள்…
பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டில் வார இறுதி நாட்களில் அலைமோதும் மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்த காலத்திலேயே மீன் மார்க்கெட்டில் பொதுவாக மக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று நோய் தாக்கத்தின் குறைந்து கொண்டு வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் தற்போது அதிகளவில் அலைமோதுகிறது. அதன்படி இன்று காலை முதலே சென்னை பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டில் காலை முதலேயே மீன் வாங்க மக்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக இருந்தது.
மேலும் தற்போதுள்ள கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டது போல் மீன் மார்க்கெட்டுகளுக்கு வந்திருந்த பெரும்பாலான வியாபாரிகள், பொதுமக்களின் முழுகவனமும் பேரம் பேசி மீன் வாங்குவதிலேயே இருந்தது..மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிந்திருந்தாலும், சிலர் அதை ஒரு பொருட்டாக கருதாமல் சாதாரண நாட்களில் உலா வந்தனர்.
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் மார்க்கெட்டை சுற்றி 4 இடத்தில் கோபுரம் போன்ற தடுப்புகள் அமைத்து ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்புபணியில் இருந்த போலீசார் முக கவசம் அணிவது பற்றிம் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து தொடர்ந்து அறிவுரை வழங்கிய வண்ணம் இருந்தனர்.
Tags :