அதிவேக 5 ஜி தொழில் நுட்ப சேவையை தொடங்குகிறது.

by Admin / 30-08-2022 01:54:41am
அதிவேக  5 ஜி  தொழில் நுட்ப  சேவையை  தொடங்குகிறது.

ரிலையன்ஸ்   தொழில்  நிறுவனங்களின் 45 வது ஆண்டு கூட்டம் ,நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி  தலைமையில் நிறுவன  முதலீட்டாளர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின்  எதிர்காலத்திட்டம் குறித்து  முகேஷ்  அம்பானி ,ரிலையன்ஸ்   ஜியோ  உலகின் அதிவேக  5 ஜி  தொழில் நுட்ப  சேவையை  தொடங்குகிறது. இச் சேவை  வரும்   தீபாவளிக்கு அறிமுகமாக  உள்ளது .முதற்கட்டமாக  இச்சேவை  டெல்லி,மும்பை,சென்னை,கொல்கத்தா ஆகிய மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.அடுத்த வருடம்  இச்சேவை இந்தியா முழுவதற்கும் விரிவுபடுத்தப்படும் .இந்தியாவை ஒரு வழுவான பொருளாதார  மண்டலமாக மாற்ற,அனைத்துப்பகுதிகளையும்  குறைந்த கட்டணத்தில் 5 ஜி இணைக்கும் என்றார்.

அதிவேக  5 ஜி  தொழில் நுட்ப  சேவையை  தொடங்குகிறது.
 

Tags :

Share via