13 வருடங்களாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்து திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான சீதா மற்றும் ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த 32 வயதான சிலம்பரசன். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரும் சீதாவும் 2010-ஆம் ஆண்டு முதல் சுமார் 13 வருடங்கலாக காதலித்து வந்துள்ளனர். ராணுவ பணியில் சேர்வதற்கு முன்பிருந்தே சிலம்பரசன் சீதாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிவந்துள்ளார்.
இதன் பின்னர் ராணுவத்தில் பணியில் சேர்ந்த பின்பும் சீதாவிடம் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்த நிலையில் விடுமுறையில் வரும் போதெல்லாம் சீதாவை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உள்ளார். மேலும் அவரது ரெட்டிபாளையம் வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து தனிமையில் இருந்துள்ளனர். இதே போல் விடுமுறையில் வரும் போதெல்லாம் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் விடுமுறையில் வந்துள்ள சிலம்பரசனிடம் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சீதா திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த சிலம்பரசன் சீதாவை ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சீதா ராணுவ வீரரான சிலம்பரசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால், சீதா செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர்.
Tags :