தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

by Staff / 27-02-2024 12:53:01pm
தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களின் முன்பு, வரும் மார்ச் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியாகி அந்தக் குடும்பங்கள் நடுத் தெருவிலே நிற்கின்ற நிலை உருவாகி உள்ளது. இந்தியா முழுவதும், தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஆளும் திமுக கட்சியை ஓர் அச்சத்தோடு பார்க்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.தமிழ்நாடு போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான திமுக அரசைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories