தமிழகத்தின் வளர்ச்சிகள் குறித்து அமீரக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

by Editor / 26-03-2022 11:33:38am
தமிழகத்தின் வளர்ச்சிகள் குறித்து  அமீரக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

துபாயில் கடந்த அக்டோபா் 1-இல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.தொழில், மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி, தமிழ் வளா்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்கள் தமிழ்நாடு அரங்கில் திரையிடப்பட்டன.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.அங்கு அவர் தமிழகத்தின் வளர்ச்சி தொழில் முன்னேற்றம்,தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்துதல், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்வது குறித்து அமீரக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.துபாய் பயணம் முடித்துவிட்டு வரும் 31-ம் தேதி மாலை அல்லது ஏப்ரல் 1-ம் தேதி காலையில் இந்தியா திரும்பும்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.பிரதமர் மோடியை, சந்தித்து பேச உள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சிகள் குறித்து  அமீரக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
 

Tags : Chief Minister Stalin consults with US Ministers on developments in Tamil Nadu

Share via