பலத்த மழை:மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் குளிக்க தடை.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் தற்போது பலத்த மழை பெய்கிளது. இதனால், மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி இன்று( மார்ச் 12 ) முதல் மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது . அதே போல, இபாபநாசம் பகுதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பாபநாசம் அருவியில் குளிப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது . மேற்கண்ட தகவைல அம்பாசமுத்திரம் வன உயிரின காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Tags : பலத்த மழை