பப்ஜி ஆன் லைன் கேம் 17 வயது சிறுவன் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை - 

by Editor / 12-03-2025 09:49:46am
பப்ஜி ஆன் லைன் கேம் 17 வயது சிறுவன் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை - 

மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகனான ஹரிஹரசுதன் என்ற 17 வயது சிறுவன் கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாத நிலையில் வீட்டிலிருந்தபடி எப்போதும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டே இருந்துள்ளார், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய சிறுவன். நேற்று மாலை திடீரென வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் -  படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது உயிரிழந்துள்ளார்.

ஆன்லைனில் பப்ஜி விளையாடி கொண்டே இருந்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்தாரா? வேறு எதேனும் ஆன்லைன் கேம் மூலமாக மிரட்டப்பட்டாரா? என்பது குறித்தும் கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

 

Tags : பப்ஜி ஆன் லைன் கேம் 17 வயது சிறுவன் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை - 

Share via

More stories