இன்று வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த .வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.
இன்று வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த .வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட அட்டவணையின் படி தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று டிசம்பர் 19 2025 என்று வெளியாகிறது. முன்னதாக டிசம்பர் 16-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது .ஆனால் ,களப்பணிகள் டிசம்பர் 14 -வரை நீடிக்கப்பட்டதால் இந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் திருத்தங்கள் அல்லது விடுபட்ட பெயர்களை சேர்க்க வரும் ஜனவரி 15, 2026 வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்ட பிறகு ,இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும். வாக்காளர்கள் ,தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான elections.tn.gov.in மூலம் சரி பார்க்கலாம்.
Tags :


















