மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண் கவுன்சிலர்கள்  மீது வழக்கு 

by Editor / 04-02-2023 09:12:13am
மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண் கவுன்சிலர்கள்  மீது வழக்கு 

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் நகர்மன்றக்கூட்டம் கடந்த 1ஆம் தேதி நடைபெற்றுள்ளது.அந்தக்கூட்டத்தில் கூட்டத்தில் தலைவர் அருள் சோபன்  உரையாற்றிக் கொண்டிருந்தபோது தங்களுடைய வார்டில் எந்த விதமான வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை என்று கூறி  பெண் நகர்மன்ற உறுப்பினர்கள் மும்தாஜ், சபீனா ஆகியோர் தங்களுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.இதுகுறித்து நகர்மன்ற தலைவர்  அருள் சோபன்  தக்கலை காவல் நிலையத்தில் நகர்மன்ற கூட்டத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண் நகர்மன்ற உறுப்பினர்கள் மும்தாஜ், சபீனா  இருவரும் தற்கொலைக்கு முயன்றதோடு தடுக்க முயன்ற தன்னை கொளுத்தி விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாக  கொடுத்த புகாரின் அடிப்படையில் கவுன்சிலர்கள் இருவர் மீதும்  ஐபிசி 309, ஐபிசி 506(!!) பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.இந்த சம்பவம் அந்தப்பாகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories