கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

by Staff / 30-12-2022 02:41:15pm
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

பிரேசிலின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான பீலே (82) காலமானார். சில காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த பீலே, சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில், பீலேவின் பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். அதன் பிறகும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலேவின் உடல் உறுப்புகள் பல செயலிழந்ததால் தற்போது அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவையொட்டி ரசிகர்கள், வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via