6வது முறையாக பிரதமரானார் நெதன்யாகு

by Staff / 30-12-2022 02:29:18pm
 6வது முறையாக பிரதமரானார் நெதன்யாகு

இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பதவியேற்றார். தற்போது அவர் ஆறாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலில் அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையை நெதன்யாகு பெற்றார். நாடாளுமன்றத்தில் உள்ள 120 உறுப்பினர்களில் 64 பேரின் ஆதரவு அவருக்கு உள்ளது. அவரது சொந்த லிகுட் கட்சி உட்பட சில கட்சிகளின் ஆதரவு அவருக்கு உள்ளது. பிரதமராக பதவியேற்ற நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via