தென்காசி தொகுதி எம்.எல்.ஏ .எஸ். பழனி நாடார் மீதான வழக்கு ஆகஸ்ட் 21-க்கு ஒத்திவைப்பு 

by Editor / 24-07-2021 05:35:14pm
தென்காசி தொகுதி எம்.எல்.ஏ .எஸ். பழனி நாடார் மீதான வழக்கு ஆகஸ்ட் 21-க்கு ஒத்திவைப்பு 



கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் எஸ். பழனி நாடார். இதை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு 370 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தேர்தல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.


பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், குறிப்பாக அஞ்சல் வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான பதிவான வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டுமென கோரியிருந்தார்.


இந்த  வழக்கு நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம், தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo