ஆக., 9, 11ஆம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு

ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது என்றார்.
Tags :