கொங்கு நாடு என்கிற பிரிவினை  விதையை விதைக்க வேண்டாம்:  கே.பி.முனுசாமி 

by Editor / 12-07-2021 05:47:53pm
கொங்கு நாடு என்கிற பிரிவினை  விதையை விதைக்க வேண்டாம்:  கே.பி.முனுசாமி 

 


தமிழ்நாட்டில் கொங்கு நாடு என்கிற பிரிவினை விதையை விதைக்கவேண்டாம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: பேரறிஞர் அண்ணா அரசியல் கட்சியை உருவாக்கிய போது திராவிட நாடு திராவிடர்க்கே என்ற கொள்கையுடன் இயங்கி வந்தார். நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அவர் வைத்திருக்கும் பற்றால், அப்படி பட்ட கொள்கையை கைவிட்டார். 
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் தமிழ்நாடு பிரிவதை விரும்பவில்லை. கன்னியாகுமரி முதல் சென்னை வரையில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் தமிழ்நாடு, தமிழர்கள் என்கிற உணர்வுடன் உள்ளனர். கொங்கு நாடு என்கிற பிரிவினை விதையை விதைக்கவேண்டாம். அப்படி ஒருவேலை கொங்கு நாடு என பிரிவினை வந்தால் தமிழ்நாட்டில் அமைதி பாதிக்கும்.
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படும் பொழுது, மத்திய அரசு நடுநிலைமையோடு செயல்பட்டு உச்சநீதிமன்றம் சென்றால் என்ன தீர்ப்பு வழங்குவார்களோ அதை உணரந்து நடுநிலையோடு செயல்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via