ஓசூர் பகுதியில் தலைமறைவாக இருந்த கோழி அருள் துப்பாக்கியுடன் நள்ளிரவில் கைது.

by Editor / 03-11-2023 09:43:53am
ஓசூர் பகுதியில் தலைமறைவாக இருந்த கோழி அருள் துப்பாக்கியுடன் நள்ளிரவில் கைது.

தென்காசிமாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் கோழி அருள் என்ற அருள்ராஜ். 50 வயதாகும் கோழி அருள், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர். அருள் மீது 20-க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நெல்லை மாவட்ட போலீஸ் தெரிவித்திருந்தனர்.இவர் மீது அம்பாசமுத்திரம் போலீசார் பதிந்த வழக்‍க்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அருள்ராஜை தனிப்படை போலீசார் இவரை தேடி வந்த நிலையில்,ஓசூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அவனை அம்பை போலீசார் துப்பாக்கியுடன் நள்ளிரவில் கைது செய்து அம்பை நீதிமன்றத்திற்கு அழைத்து வருகின்றனர்
 

 

Tags : ஓசூர் பகுதியில் தலைமறைவாக இருந்த கோழி அருள் துப்பாக்கியுடன் நள்ளிரவில் கைது.

Share via

More stories

Logo