தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாமகவில் குழப்பம்.

தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாமகவில் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் பாமக நிர்வாகிகள் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் ராமதாஸ் மகள்கள் அவரிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதே போல பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் பரசுராமனும், ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் பேசி வருகிறார்.
பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி, 'நானே தலைவர்' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அவரது அதிரடி கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரம் நான் தான் கட்சியின் தலைவர் என அன்புமணியும் கூறினார். இதையடுத்து இருவரிடமும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் தன்னுடைய முடிவில் மாற்றமில்லை என ராமதாஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாமகவில் குழப்பம்.