காவல்துறைக்கு சோதனை காலம்.!

by Editor / 27-06-2021 08:07:59pm
காவல்துறைக்கு சோதனை காலம்.!

தமிழகத்திலுள்ள காவல்துறை சோதனைசாவடிகளால் காவல்துறையினருக்கு சோதனைக்காலம் தான் கடந்த சில நாட்களாக நடந்துவருகிறது.

 தென்காசி மாவட்டம் புளியரையில் 10 கிலோ ரேஷன் அரிசியை விற்பனைக்காக கொண்டு சென்ற பிரான்சிஸ் என்ற நபரை காவல்துறையினர் தாக்கியதாக  செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவரது மகள்கள் போராட்டத்தில் குதித்தனர்.இதன்காரணமாக 2 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மீதும் வழக்கு பதிவு செய்து பிரச்சனையை காவல்துறை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேர் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வந்துள்ளனர். 
அப்போது உசிலம்பட்டி சாலையில் விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவர்களின் வாகனம் ஒன்று போலீசார் அமைத்திருந்த சோதனைச்சாவடி பேரிகார்டு மீது மோதியது.அப்போது அங்கிருந்த போலீசார் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக போலீஸாருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து இளைஞர்கள் அருகில் இருந்த தென்னை மட்டையை எடுத்து போலீசாரை தாக்க தொடங்கினர்.இந்நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தி இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 
 சேலத்தில் வியாபாரி ஒருவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதில் வியாபாரி பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.அதே போல தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலருகே குடிபோதை ஆசாமி ஒருவர் போலீசார் மீது சாக்கடையை வீசிய சம்பவமும் அரங்கேறியது. தமிழகத்தில் போலீசார் – பொதுமக்கள் இடையே கசப்பான நிகழ்வுகள் உருவாகி வருவதை தமிழக அரசு கண்காணித்து தீர்வு காண வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம். 

 

Tags :

Share via