கடும் வெள்ளப்பெருக்கு.. 14 பேர் பலி

by Staff / 17-03-2023 01:24:02pm
கடும் வெள்ளப்பெருக்கு.. 14 பேர் பலி

துருக்கி இயற்கை பேரிடர்களால் தத்தளித்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற கடுமையான நிலநடுக்கத்தின் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரும் நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதியமான் மற்றும் சன்லியுர்பா மாகாணங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலையில் வாகனங்கள் அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

 

Tags :

Share via
Logo