சத்தியமூர்த்தி மறைவு: டிடிவி இரங்கல்..
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மினாளின் சகோதரர் சத்தியமூர்த்தி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவாலய பொறுப்பாளர் திருமதி. காந்தி மீனாள் அவர்களின் சகோதரர் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.சத்தியமூர்த்தி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எனப் பதிவிட்டுள்ளார்.
Tags :



















