பெண் காவலர்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 புதிய அறிவிப்புகள்

பெண் காவலர்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 புதிய அறிவிப்புகள் அறிவித்துள்ளார். பெண் காவலர்களுக்கு கலைஞர் பெயரில் விருது வழங்கப்படும். ரோல்கால் எனும் காவல் அணி வகுப்பு இனி காலை 7 மணிக்கு பதிலாக 8 மணி என மாற்றப்படும். சென்னை, மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி விரைவில் அமைக்கப்படும். பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச்சுடும் போட்டி தனியாக நடத்தப்பட்டு விருது, பரிசுகள் வழங்கப்படும். அனைத்து காவல்நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வறை அமைத்து தரப்படும். டிஜிபி அலுவலகத்தில் பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :