செந்தில் பாலாஜி வழக்கில் ED கேவியட் மனு

by Staff / 15-07-2023 01:41:28pm
செந்தில் பாலாஜி வழக்கில் ED கேவியட் மனு

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் மூன்றாவது நீதிபதி நேற்று செந்தில் பாலாஜி கைது நீதிமன்ற காவல் சட்டப்படியானது என்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இது செந்தில் பாலாஜி வழக்கில் மேலும் அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories