இன்று இரவு.மதுரை - சென்னை முன்பதிவு இல்லாத மெமு ரயில் சேவை.

by Editor / 11-01-2025 04:40:56pm
இன்று இரவு.மதுரை - சென்னை முன்பதிவு இல்லாத மெமு ரயில் சேவை.

மதுரை - சென்னை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06110) மதுரையில் இருந்து ஜனவரி 11 இன்று இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.40 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும்.

 

Tags : இன்று இரவு.மதுரை - சென்னை முன்பதிவு இல்லாத மெமு ரயில் சேவை

Share via