கிணறு தோண்டும்போது மண் சரிந்தது... 3 வயது குழந்தை உள்பட 5 பேர் பரிதாப சாவு...

ராஜஸ்தானில் கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் நேற்று கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. கிணறு வெட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மண் சரிந்து கிணற்றுக்குள் விழுந்தது.
இதனால், கிணற்றுக்குழியில் நின்றுகொண்டிருந்த விக்ரம், தினேஷ், பூரன் சிங், ஜங்கி லால், அனுஷ்கா ஆகிய 5 பேரும் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.
இதனையடுத்து மீட்கப்பட்ட 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர் ஐவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது
Tags :