சமந்தா   மீண்டும் திருமணம்  செய்து கொள்ள ஒப்புக்கொள்வாரா ...?.

by Writer / 24-09-2022 12:02:48pm
சமந்தா   மீண்டும் திருமணம்  செய்து கொள்ள ஒப்புக்கொள்வாரா ...?.

நடிகை சமந்தா  தி ஃபேமிலி மேன் 2 மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்திற்கு பிறகு  மக்களிடையே  நாளுக்கு நாள் அவரது  புகழ் அ திகரித்து  வருவதால், அவரது  தனிப்பட்ட வாழ்க்கை ஊடக வெளிச்சத்தில் ...

கடந்த ஆண்டு, தனது  முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்ததாக அறிவித்த பிறகு  ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திது.  தற்போது  சமந்தா  இரண்டாவது திருமணம் குறித்த   தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.    மீண்டும் திருமணம் செய்து கொள்ள  அவரது குருவான சத்குரு ஜெகதீஷ் வாசுதேவ் கட்டளைக்காக காத்திருப்பதாக  தகவல்.  சமந்தாவிடம் இருந்து விவாகரத்து  பெற்ற  நாக சைதன்யா நடிகையும்  மாடலுமான ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவி  வைரலானது.
, சமந்தாவும்  நாக சைதன்யாவும் 2010 ஆம் ஆண்டு  யே மாயா சேசவேயின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து  டேட்டிங் செய்யத் தொடங்கினர்  2017 இல்  ஹைதராபாத்தில்  நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர், அதைத் தொடர்ந்து 2017 இல் கோவாவில்  திருமணமும் நடந்தது. கடந்த ஆண்டு  அவர்கள் பிரிந்ததாக  அறிவித்தபோது நான்கு வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
, சமந்தா ரூத் பிரபு அடுத்து  யசோதா,  சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய படங்களில் நடிக்கிறார் . அவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் தினேஷ் விஜனின்  தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் மூலம்தம் திரையுலக எல்லையை விரிவுபடுத்த தயாராகி வருகிறார். 

சமந்தா   மீண்டும் திருமணம்  செய்து கொள்ள ஒப்புக்கொள்வாரா என்பதை அறிய ரசிகர் ஆவலுடன் காத்திருக்கின்றனர் இதற்கிடையே அவர் இந்திய  அளவில் இந்தி நடிகைகளைஎல்லாம்  பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளாா்..

 

Tags :

Share via