விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5

by Editor / 24-08-2021 06:51:02pm
விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5

கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் 5 அக்டோபர் மாதத்துக்கு தள்ளிப் போயிருக்கிறது.

சமீபத்தில் ப்ரோமோ ஷூட்டிங் நடைபெறும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 முதல் கட்ட பணிகள் போட்டோ ஷூட் உடன் தொடங்கப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via