தீபாவளி பட்டாசு வெடித்து 4 குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதாக அதிர்ச்சி தகவல்.

by Editor / 05-11-2024 11:52:08am
 தீபாவளி பட்டாசு வெடித்து 4 குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதாக அதிர்ச்சி தகவல்.

தீபாவளிப்பண்டிகை கடந்த 31 ஆம் தேதி நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது.மதுரையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்த போது 104 பேருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு மதுரை தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அதில் 4 குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை அதிர்ச்சியான தகவலைவெளியிட்டுள்ளது.மேலும் 
குழந்தைகள் எதிர்காலம் கருதி பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும் என தனியார் கண் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது

 

Tags :  தீபாவளி பட்டாசு வெடித்து 4 குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதாக அதிர்ச்சி தகவல்.

Share via

More stories

Logo