ஆம்னி வேன் கோர விபத்து - 3 பேர் படுகாயம்

by Staff / 08-10-2022 11:47:19am
ஆம்னி வேன் கோர விபத்து - 3 பேர் படுகாயம்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள எம்விஆர் சுங்கச்சாவடியில் இருந்து மேட்டூரை நோக்கி தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென குறுக்கே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள ஆம்னி வேன் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது பலமாக மோதியது. பின்பு அருகிலிருந்த மளிகை கடையிலும் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோட்டகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகன் சண்முகம் அவரது மனைவி சுலோச்சனா மகன் லோகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஆம்னி வேன் அப்பளம் போல் நொருங்கியதில் அதில் வந்த ஓட்டுநரின் கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். தொடர்ந்து ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஓமலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் கருப்பூர் காவல்துறையினர் இணைந்து விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். தொடர்ந்து அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கருப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo