குமரி அருகே வாலிபர் எரித்துக் கொலை..

கன்னியாகுமரி அருகே லீபுரம் குளக்கரையில் ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது உடலை கைப்பற்றி கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து துப்புத் துலக்குவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதி எரிந்த சடலம் குறித்து பல்வேறு கோணங்களில் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :