பொள்ளாச்சி  அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்..?

by Staff / 23-08-2025 10:29:21am
 பொள்ளாச்சி  அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்..?

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஏற்படுத்திய வடு மறைவதற்குள் மற்றுமொரு அதிர்ச்சிகர புகார் வெளியாகியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகள் சிலர் கூறியுள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் அதிர்ச்சிகர குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

ஆசிரியர்கள் குறித்து மாணவிகள் தெரிவித்த திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பள்ளியில் பணியாற்றும் இசை ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன் அணுகுவதாகவும், நடனப் பயிற்சி என்ற பெயரில் தவறான நோக்கத்தில் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாகவும், வரம்பு மீறி நடந்து கொள்வதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இசை ஆசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் இருவரும் பள்ளிக்கு வரும்போது மதுபோதையில் வருவதாகவும், இதனால் பள்ளிக்கு வரவே அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

Tags :  பொள்ளாச்சி  அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்..?

Share via