அதிமுகவின் 52-வது தொடக்க விழா - 4 நாட்கள் பொதுக்கூட்டம்

by Staff / 09-10-2023 01:08:03pm
அதிமுகவின் 52-வது தொடக்க விழா - 4 நாட்கள் பொதுக்கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' 17. 10. 2023 செவ்வாய் கிழமையன்று 52-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17. 10. 2023, 18. 10. 2023, 26. 10. 2023, 28. 10. 2023 ஆகிய நான்கு நாட்கள் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17. 10. 2023 அன்று புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். , புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo