கலைஞரின் நினைவிடமல்ல தாஜ்மகால்- ரஜினிகாந்த்

by Editor / 27-02-2024 12:00:23am
கலைஞரின் நினைவிடமல்ல தாஜ்மகால்- ரஜினிகாந்த்

கருணாநிதி நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைச்சர்களும் வருகை புரிந்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய அவர், மெரினாவில் இருப்பது கலைஞரின் நினைவிடம் அல்ல, கலைஞரின் தாஜ்மகால். நினைவிடத்திற்கு பதில் தாஜ்மகால் என்று சொல்லுமளவுக்கு பிரம்மாண்டமாக உள்ளது. கலைஞர் நினைவிடத்தில் உள்ள அனைத்தும் சிறப்பாக உள்ளது. கனவுலகம் போல் இருக்கிறது என கூறியுள்ளார்.

 

Tags : ரஜினிகாந்த்

Share via

More stories