தமிழக அரசு பேருந்தில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 315 கிராம் தங்கம் பறிமுதல்

by Editor / 27-02-2024 12:02:03am
தமிழக அரசு பேருந்தில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 315 கிராம் தங்கம் பறிமுதல்

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடியில்  இரவு 10:30 மணி அளவில் புளியரை காவல்துறை உதவி ஆய்வாளர் தீபன் குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது தென்காசியில் இருந்து கொட்டாரக்கரை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்தை  நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சார்ந்த நவாஸ் சலீம் என்பவரின் மகன் அனஸ் என்கின்ற வாலிபரிடம் நடத்திய சோதனையில் 315 கிராம் எடை கொண்ட 20 லட்ச ரூபாய் மதிப்பிலான உருக்கப்பட்ட தங்க கட்டி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின்னாக தகவல் தெரிவித்துள்ளார்.எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. மேலும் கடையநல்லூரில் உள்ள தங்க கடையிலிருந்து  வாங்கிக்கொண்டு மலப்புரம் பகுதியில் உள்ள திரு என்கின்ற பகுதியில் செயல்படும் நகை கடைக்கு  கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் தன்னிடம் இது குறித்து ஆவணங்கள் அனைத்தும் தான் பணியாற்றும் கடையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக புளியரை போலீசார்  இன்று காலை விசாரணை மேற்கொண்டதில் தங்கத்திற்கான ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாததின் காரணமாக  வழக்கு பதிவு செய்து 315 கிராம் தங்கத்தை செங்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 
 

 

Tags : கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 315 கிராம் தங்கம் பறிமுதல்

Share via