மே29-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்!

by Editor / 25-05-2023 08:28:34am
மே29-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்!

மே29-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்.போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட், வரும் 29-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து அன்றைய தினம் காலை 10.42 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ என்ற கட்டமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

 

Tags : gslv

Share via
Logo