ஒரு மாதத்துக்கு தலைநகர் டெல்லியில் 144 தடை உத்தரவு
புதிய வேளாண் சட்டங்களை அளித்த வாக்குப்படி பாஜக அரசு ரத்து செய்யாததை கண்டித்து நாளை(பிப்.13) தில்லி நோக்கி 20,000 விவசாயிகள் அணிவகுத்துச் செல்ல உள்ளனர். இதனால் மாநில எல்லையில் தடைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டெல்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைக்குள் போராட்டம், பேரணி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், டிராக்டர், லாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Tags :