சாதி ஆணவப்படுகொலையா? - தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த முத்து பெருமாள் என்பவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஜான்சன் நகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போது தெற்கு காரசேரியை சார்ந்த சமூக விரோதக் கும்பல் வழிமறித்து, ஜாதி ரீதியாக அவரை கொச்சைப்படுத்தி வெட்டி படுகொலை செய்து விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கைது செய்யக்கோரி பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது சாதி ரீதியான ஆணவ படுகொலையாக இருக்குமோ என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Tags :