நம்பி கோவிலுக்கு 11  தேதி முதல்  பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை

by Editor / 11-03-2025 10:11:59am
நம்பி கோவிலுக்கு 11  தேதி முதல்  பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை

திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை  காரணமாக தொடர் நீர்வரத்து அதிகரிப்பால்  மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைபடி துணை இயக்குநர் களக்காடு  உத்தரவின்பேரில் , களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக் கோட்டம், திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட மலைநம்பி கோவிலுக்கு 11.03.2025ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை  பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது‌ என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு வனச்சரக அலுவலர்  திருக்குறுங்குடி வனச்சரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : நம்பி கோவிலுக்கு 11  தேதி முதல்  பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை

Share via