அரக்கோணம் அருகே நள்ளிரவில் ரயில்வே ஊழியர்களின் 2 பைக்குகள் எரிப்பு

by Staff / 10-06-2025 11:56:48pm
அரக்கோணம் அருகே நள்ளிரவில் ரயில்வே ஊழியர்களின் 2 பைக்குகள் எரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நள்ளிரவில் மர்மநபர்கள் இரு ரயில்வே ஊழியர்களின் 2 பைக்குகள் எரித்தனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அரக்கோணம் நகர காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம் அடுத்த ஆப்பில்ஸ்பேட்டை ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் ரயில்வே ஊழியர் ராஜேஷ் மீனா(35). இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் குடும்பத்துடன் இங்கு வசித்து வருகின்றார். 

இதே ரயில்வே  குடியிருப்பில் பக்கத்தில் வசித்து வருபவர் ரயில்லே ஊழியர் ஆனந் மாதவ்(39). இவர் பீகார் மாநிலத்தவர். இவரும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இருவரின் பைக்குகளும் வழக்கம் போல் குடியிருப்பிற்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்கி வந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 2 மணியளவில் குடியிருப்பின் வெளியே நிறுத்தியிருந்த இரண்டு பைக்குகள் கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனை கண்டவர்கள் உடனடியாக எழுந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவயிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்திய RPF வீரர்கள் இதுகுறித்து அரக்கோணம் நகர காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்கள். புகாரின் பேரில் அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பைக்குகளுக்கு தீ வைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்கள்.

 

Tags : அரக்கோணம் அருகே நள்ளிரவில் ரயில்வே ஊழியர்களின் 2 பைக்குகள் எரிப்பு

Share via